BABA

BABA
:)

Wednesday, March 9, 2011

சிலப்பதிகாரம் - நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு - இளங்கோ அடிகள்
2. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்

...கி.பி 900-1000
3. சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்
4. வளையாபதி - (அனானி)
5. குண்டலகேசி - நாதகுத்தனார்

ஒவ்வொன்றாகப் பார்த்துச் சுவைக்கலாமா? உண்மை = எல்லாருக்குமே சுவைக்கும்! ஒரு சிலருக்கு மட்டுமே கசக்கும்!! :)

* வேங்கட மலையில் நிற்பவன் = பெருமாளா? முருகனா?
* மாதவி ஆடும் நாட்டியம் = முதல் வணக்க நடனம் = யாருக்கு?
* மதுரைக்குப் போகும் "ரூட்" - பழமுதிர் சோலை வழியாகப் போகலாமா?
* கோவலன் - கண்ணகி ஊரை விட்டு கிளம்பும் முன், எந்தக் கோயிலுக்குச் சென்று வேண்டிக் கொண்டார்கள்??
=> சிலப்பதிகாரத்தில் பெருமாள் என்னும் தமிழ்க் கடவுள்!

* பல்வேறு சமயத் தலைவர்களுக்குள் விவாதம் நடக்கிறது மணிமேகலையில்! ஆனால் வைணவம் மட்டும் வாயை மூடிக் கொண்டு...கப்-சிப்! :)
=>மணிமேகலையில் தமிழ்க் கடவுள்!

* நப்பின்னையைக் கண்ணன் ஏறு தழுவி ஏற்றுக் கொள்ளவில்லையா? என் மகளையும் அப்படியே ஏற்றுக் கொள்! - இப்படிச் சொல்லும் தந்தை யார்?
=>சீவக சிந்தாமணியில், தமிழ்க் கடவுள்!

சீவக சிந்தாமணி, மற்றும் வளையாபதி/குண்டலகேசி பின்னாளைய காப்பியங்கள்! சிலம்பு/மணிமேகலையைப் போல் முற்பட்டது அல்ல! எனினும் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாக இவை வழங்கப்படுகின்றன!

வளையாபதி/குண்டலகேசி பாடல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை! அதிலும் வளையாபதி கதை என்னதென்றே கண்டு பிடிக்க முடியாதபடி நிலைமை! எப்படியும் இவை சங்க காலம் கிடையாது!ஆழ்வார்கள் காலத்துக்கும்(கி.பி 5 - கி.பி 7) பிந்தி தான்!

எனவே திருமால் = தமிழ்க் கடவுள் என்கிற தரவுக்கு, வளையாபதி/ குண்டலகேசியை நான் எடுத்துக் கொள்ளவில்லை!
ஆழ்வார்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை! சங்க நூல்கள் மட்டுமே கணக்கில் கொள்வோம்!
See more

Monday at 20:14 ·

No comments:

Post a Comment