BABA

BABA
:)

Wednesday, March 9, 2011

களவு நிலை, கற்பு நிலை - இதற்கு நடுவில் இருப்பது கனவு நிலையா? :)

* காதலுக்கும் கனவுக்கும் அப்படி என்ன தொடர்பு? காமத்துப் பாலில் "கனவு" சொல்ல...ப்பட்டிருக்கா?

* காதலால் கனவு வருகிறதா? கனவில் காதல் வருகிறதா??

* அட, கனவில் சாமி வந்து சொல்லிச்சி-ன்னு எல்லாம் கதைகளில் வருமே! ஆனா, என் கனவில் சாமி வர மாட்டேங்குதே! காதல் அல்லவா வருது? :)

A dream is a succession of an image, sounds or emotions which the mind experiences during sleep.
The content and purpose of dreams are not fully understood, though they have been a topic of speculation and interest throughout recorded history.

இதுக்கெல்லாம் பதில் வேணும்-ன்னா...
* ஒன்னு, Christopher Nolan-இன் Inception படம் பார்க்கலாம்!
* இல்லை, இருக்கவே இருக்கிறோம் - என்னிடமோ, தோழி கோதையிடமோ கேட்கலாம்! :)

கனவைப் பற்றிய ஆய்வுகளை Oneirology என்பார்கள்!
இலக்கியம் + அறிவியல் = ரெண்டுத்துக்குமே கனவு என்பது நெருங்கின சொந்தம்!

நம்மூர்ல கனாத் திறம் உரைத்த காதை-ன்னா, அசலூர்-ல A MidSummer Night's Dream!
கனவின் டெக்னாலஜி பற்றியெல்லாம் இன்னிக்கி பேசப் போவதில்லை! அது இன்னொரு நாள்! இன்னிக்கி வேற மேட்டர்! :)
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து? (குறள் 1211)
ஹேய்! என்ன விருந்து கொடுக்கலாம்? இந்தக் கனவு, அவன் கிட்ட இருந்து ஏதோ சேதி கொண்டாந்திருக்கே!

என்ன சேதி, என்ன கனவா? சேச்சே! அதையெல்லாம்...
* சொல்ல வெட்கமா இருக்கும்! ஆனா பாட ஈசியா இருக்கும்! So, பாட்டுல படிச்சிக்கோங்க! :)

No comments:

Post a Comment