BABA

BABA
:)

Wednesday, March 9, 2011

வாய்நல்லார் மாறன் தமிழ்ஓதி மந்திரத்தால்
சேய்வேண்டி நாணல் படுத்துப் பரிதிவைத்து
சீர்வளர் மயில் அன்னான் மயிலாள் என் கைப்பற்றித்
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(7)

...(அரையர்கள், தமிழ் வேதமான திருவாய்மொழியை, மாறன் மறையை
- "நல்ல கோட்பாட்டு உலகங்கள் முன்றினுள்ளும் தான் நிறைந்து,
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே"
என்று ஓத - நாணல் பரப்பி - அகில் குச்சிகளால் வேள்வி ஓம்பி
என் கைப்பிடித்து - இரு மயில்கள் நடந்து வருவது போல், ஒயிலாகத் தீவலம் வர...)

இன்னைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
என்னை உடையவன் எழில்முருகத் திருநம்பி
முன்னை என் கால்பற்றி முன்றில் அம்மியின் மேல்
பொன்மெட்டி பூட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(8)

வரிசிலை மன்மதன் அண்ணன்மார் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
கரிமுகத்து இளையோன் கைமேல் என் கை வைத்து
பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(9)

(உலகு அத்தனைக்கும் கிளர்ச்சி ஊட்டும் மன்மதனோ, என் சொந்த அண்ணன்; நாரணத் தந்தையின் மானசீக மகன் -
திருக்கை வேலின் காதல் முன் கரும்பு வில்லின் காமம் நிற்குமோ?
தொலைவில் இருந்து அம்பெய்த முடியாமல், அருகில் வந்து, முருக மைத்துனனாகப் பொரி முகம் தட்டி,
என்னை யானைமுகத்தான் தம்பியிடம் ஒப்புவிக்க..)

குங்குமம் இட்டு குளிர்ச் சாந்தம் எனக்கிட்டு
மங்கலக் குடதீபம் கையேந்தி மனைக்குள்ளே
அங்கவனோடு நான் உடன்சென்று இல்வாழ
முங்கினேன் முருகொடு முதலிரவில் - தோழீ நான்! ...(10)

(நித்ய சுமங்கலிப் பொட்டிட்டு, சாந்தும் இட்டு,
காமாட்சி அம்மன் விளக்கைக் குடத்தில் வைத்து,
பத்திரமாக முருக மனைக்குள் புக...பின்பு முருக நம்பியும் எனக்குள் புக...
மருந்தாய் என்றும் மனத்துள்ளே, அவனை வைத்து இருப்பார்கள்,
பெருந்தாள் உடைய பெருமுருகனை, பிரியாது என்றும் இருப்பார்களே!)

கந்தனுக்காகத் தான் கண்ட கனாவினை
முந்துற மாதவிப் பந்தலின் பேதை சொல்
அந்தமும் ஆவியும் நீயே நீயெனச்
செந்தூர் முருகனின் சேவடிச் சேர்வரே!

அடுத்த முருகப் பாசுரம்...எப்படி இருக்கும்-ன்னு நினைக்கறீங்க? :)
கருப்பூரம் மணக்குமோ? கமலப்பூ மணக்குமோ?
திருமேனித் திரள்முழுதும் தித்தித்து இருக்குமோ?
இருதோளில் சாய்ந்தே துயில்காணும் இன்பத்தை
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாய்நீ வடிவேலே!
See more

No comments:

Post a Comment