BABA

BABA
:)

Monday, March 7, 2011


எலும்பு மஜ்ஜை தானம்-னு பதிவுல சொல்றதுக்கு எல்லாம் ஈசியாத் தான் இருக்கும்! ஆனா உதவணும் மனம் இருந்தாக் கூட, மனத்தில் கூடவே பயமும் இருக்கேப்பா!
எங்க வீட்டுல சொன்னா அவ்ளோ தான்! டின்னு கட்டிருவாங்க! இந்த வேலையெல்லாம் உனக்குத் தேவையா-ன்னு கேட்பாங்களே!

அட என்னாங்க அண்ணாச்சி, இப்பிடி வீட்டுக்குப் பயந்த புள்ளையாட்டும் ஆக்ட் எல்லாம் கொடுக்கறீங்க? நீங்க "தம்" அடிக்கறது வீட்டுக்குத் தெரியுமா என்ன? :-)
இல்லீன்னா மவுண்ட் ரோடு கேசினோ தியேட்டர் படத்துக்கு எப்பமே வீட்ல சொல்லிட்டுத் தான் வாரீங்களா? :-)
ஹிஹி! கோச்சீக்காதீங்க! சும்மா ஒங்களைச் சீண்டறத்துக்காகச் சொன்னேன்!

நமக்கே இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா விஷயம் புரியுது! அப்படி இருக்க, வீட்டில் இருக்கும் அம்மா அப்பாவுக்கோ, இல்லை மனைவிக்கோ முழு விஷயம் தெரியும்-னு எதிர்பார்க்கலாமா? நீங்க பக்குவமா எடுத்துச் சொல்லலாம்!
அதை விட, நீங்க தானம் கொடுத்து விட்டு அப்புறம் வந்து சொன்னீங்கனா, உங்களைப் பார்த்த பின்னாடி அவிங்களுக்கே ஒரு தெம்பு வந்துரும்! சமையலைக் கூட உங்க மேலத் தானே முதலில் டெஸ்ட் பண்ணறது வழக்கம்? அதே போல இதுக்கும் நீங்க தான் முதல் டெஸ்ட்! :-)

பச்சைக் குழந்தைகள் விஷயத்தில் உங்களையும் என்னையும் விட, வீட்டில் இருப்பவங்களுக்குத் தான் கருணையும் அதிகம்! பொறுமையும் அதிகம்! எத்தனையோ விஷயம் செஞ்சிட்டீங்க! இதைச் செய்ய முடியாதா உங்களால?
வலியோ, பக்க விளைவுகளோ இன்றி இயல்பாக எடுக்கப்படும் முறை தான் எலும்பு மஜ்ஜை தானம்

இந்த பாறைகளுக்கு சிலா தோரணம் என்று சொல்லுவர். உலகத்திலேயே இந்தப் பாறைகள் இங்கு மட்டும்தான் இருக்கின்றன. இந்த பாறைகளின் நடுவே இருக்கும் துவாரத்திலிருந்து திருவேங்கடமுடையான் வெளிப்பட்டார் என்பது ஐதீகம். இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். திருவேங்கடமுடையானின் திருமேனியும், இப்பாறைகளும் ஒரே விதமானவை. மண்ணியல் (ஜியாலஜிஸ்ட்) நிபுணர்கள் இப்பாறையை ஆய்வு செய்து, 250 கோடி ஆண்டுகள் வயது கொண்டவை என கணக்கிட்டிருக்கிறார்கள். இரண்டாவதாக, பச்சை கற்பூரம் திருமேனிக்கு சாற்றுகிறார்கள். காலம் காலமாக, ஹிந்து அரசர்கள் ஆண்ட காலங்களிலிருந்து இந்த பச்சை கற்பூரம் ஒரு தாவர பொருள். சுமத்ரா, கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் இப்போது பச்சை கற்பூரன் ஒரு கெமிக்கல்; அரிப்பைக் கொடுக்கும் ஒரு அமிலம். இந்த பச்சை கற்பூர கெமிக்கலை சாதாரண பூமியிலுள்ள கருங்கல்லில் தடவினால், கல் வெடித்து விடும். ஆனால் சிலா தோரணத்திலுள்ள பாறைகளில் இந்த கெமிக்கலைத் தடவினால், அப்பாறைகள் வெடிப்பதில்லை. அதே போல் திருவேங்கடமுடையானுக்கு 365 நாட்களும் பச்சை கற்பூரம் சாற்றினாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. சிலா தோரண பாறைகளும், திருவேங்கடமுடையானின் பாறைகளும் ஒரே தன்மை கொண்டவை. மூன்றாவதாக, எந்த கருங்கல் சிலையானாலும் எங்கேயாவது ஒரு இடத்தில் சிற்பியின் உளி பட்டிருக்கும். எந்த உலோக சிலையானாலும், தங்கமாகட்டும், ஐம்பொன்னாகட்டும், உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். திருவேங்கடமுடையானின் சிலையில் எங்கும் உளி பட்ட அடையாளம் தெரியவில்லை. நான்காவதாக இவருடைய சிலை திருமேனி பளபளப்பாக இருக்கிறது. கருங்கல் சிலை மொரமொரப்பாக இருக்கும். கருங்கல்லுக்கு பாலிஷ் போடலாம். பாலிஷ் போட்டால் பள பளவென்று இருக்கும். ஆனால் அது மெஷின் பாலிஷ். மெஷின் பாலிஷ் வந்து சுமார் முப்பது வருடங்கள்தான் ஆகின்றன. தவிர மெஷின் பாலிஷ், தூண்கள், கம்பங்கள் போன்ற நேர்கோட்டுப் பொருட்களுக்குத்தான் போட முடியும்ல். நுணுக்கு வேலைப்பாடுகளுக்கு மெஷின் பாலிஷ் போட இயலாது. இவருடைய திருமேனி விக்ரஹத்தில் நெற்றிச்சுட்டி, காதணி, புருவங்கள் எல்லாம் பாலிஷ் போட்டவை போல் பள பளப்பாக இருக்கின்றன. ஐந்தாவதாக, இவருடைய திருமேனி எப்போதும் 110 பாரன் ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை மூவாயிரம் அடி உயரத்திலுள்ள குளிர் பிரதேஸம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால் அபிஷேகம் முடிந்தவுடன் அவருக்கு வியர்க்கிறது

வியாழக் கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகை மற்றும் தங்க கவசங்களை கழற்றும் போது ஆபரணங்கள் எல்லாம் சூடாக கொதிக்கின்றன. இந்த தகவல்களை சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன்பிருந்த பிரபல சான்றோர்கள், அர்ச்சகர்கள், வேங்கடபதி தீக்ஷிதர், மணப்பாக்கம் சுந்தர ஆச்சாரியர், முல்லன்றம் கனபாடிகள் போன்றோர் சொல்லியிருக்கின்றார்கள். இவர்கள் ஸ்வாமிக்கு பல வருஷங்கள் அபிஷேகம் செய்தவர்கள். கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் சிவலிங்கத்திற்கு அருகில் மிகவும் குளிர்ச்சியான கற்கள் இருக்கின்றன. அவை சந்திரகாந்தக் கற்கள். அதேபோல உஷ்ணமாக திருவேங்கடமுடையான் திருமேனி இருக்கிறது. இந்த ஆதாரங்கள் எல்லாம் நேரடியாக பரிசோதித்துப் பார்க்கும்படி இருக்கின்றன. எந்த கோவிலிலும் இல்லாத சில சிறப்புகள் இந்த கோவிலில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று மந்திர புஷ்பம். இதற்கு மூர்த்தி மந்திரம் என்று பெயர். விடியற்காலையில் கோவிலில் பிரதான அர்ச்சகர் இந்த மந்திரத்தை சொல்லுவார். இந்த மந்திரத்தை சொன்னால் வேங்கடமுடையான் பிரசன்னமாகி விட்டார், சபை கூடி விட்டது

No comments:

Post a Comment